www.garudabazaar.com

வந்தாச்சு “வா சாமி..”.. தெறிக்கவிடும் ரஜினியின் ‘அண்ணாத்த’ பட 4வது சிங்கிள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் 4வது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. 

Annaatthe vaa saami 4th single out Rajini Siruthai Siva Imman

ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதிபாபு, வேல ராமமூர்த்தி, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர்.

Annaatthe vaa saami 4th single out Rajini Siruthai Siva Imman

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Annaatthe vaa saami 4th single out Rajini Siruthai Siva Imman

இதனைத் தொடர்ந்து ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் பெயர் கணேசன் என்று ஏற்கனவே தகவல்கள் கிடைத்தன. மேலும் படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளதாகவும், படத்தின் நீளம்  2 மணிநேரம் 43 நிமிடங்கள்  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Annaatthe vaa saami 4th single out Rajini Siruthai Siva Imman

இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் 4-வது சிங்கிள் பாடலான ‘வா சாமி..’ பாடல் இன்று (24.10.2021) மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ளது. இந்த பாடலை டி.இமான் இசையில் பாடலாசிரியர் அருண் பாரதி பாடலை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளார்.

Annaatthe vaa saami 4th single out Rajini Siruthai Siva Imman

அண்ணாத்த படத்தில் ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில் இப்போது வெளியாகியுள்ள இந்த பாடலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மேற்படி, அண்ணாத்த படம், வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 அன்று திரைக்கு வருவதாக ஏற்கனவே இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்  அறிவித்துள்ளது. 

Annaatthe vaa saami 4th single out Rajini Siruthai Siva Imman

இதனிடையே நவம்பர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளது. ஆகவே அண்ணாத்த படத்தை தீபாவளி பண்டிகையில் குடும்பத்துடன் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Annaatthe vaa saami 4th single out Rajini Siruthai Siva Imman

People looking for online information on Annaatthe, Arun Bharathi, D Imman, Rajinikanth, Siruthai Siva, Sun pictures will find this news story useful.