www.garudabazaar.com

அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்த நடிகர் மன்சூர் அலிகான்! மாநகராட்சி எடுத்த நடவடிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அரிமுகமாகி காமெடியன், குணசித்திரம் பின் ஹீரோவாக ந்டித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை தமிழ் சினிமாவில் பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் இவர். சில படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.

Corporation officials seal the house of actor Mansoor Ali Khan

நடிகராக மட்டுமல்லாது அரசியல்வாதியாகவும் அறியப்படுபவர் மன்சூர் அலிகான். பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தல் பணியாற்றியுள்ளார். புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சிகளுக்கு தேர்தல் வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளார். 

Corporation officials seal the house of actor Mansoor Ali Khan

இந்நிலையில், சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள  2,500 சதுர அடி அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதால் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வீட்டுக்கு சீல் வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, தன்னிடம் ஏமாற்றி புறம்போக்கு நிலத்தை விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கடந்த 2019 ஆம் ஆண்டு மன்சூர் அலிகான் புகாரளித்திருந்தார். 

Corporation officials seal the house of actor Mansoor Ali Khan

இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு மன்சூர் அலிகான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகர் மன்சூர் அலிகான் 2012 ல் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சொத்துக்காக நில அபகரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Corporation officials seal the house of actor Mansoor Ali Khan

People looking for online information on Chennai Corporation, Mansoor Alikhan will find this news story useful.