www.garudabazaar.com

PS1: என்னா Friendship.. பேசும்போது ரஜினி வெச்ச Request.. கமல் செய்த காரியம்.. நெகிழ்ச்சியில் அரங்கம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

rajini and kamal in ponniyin selvan audio launch auditorium erupts

Also Read | ஒரே மேடையில் ஐஸ்வர்யா ராய் & த்ரிஷா.. ரஜினி, கமல் குறித்து மாஸ் பேச்சு!

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

rajini and kamal in ponniyin selvan audio launch auditorium erupts

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

rajini and kamal in ponniyin selvan audio launch auditorium erupts

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் ஒன்றாக மேடையில் தோன்றி இருந்தனர். விக்ரம் படத்தின் வெற்றிக்காக கமலை வாழ்த்தவும் செய்தார் ரஜினிகாந்த். மேலும், இருவரும் பொன்னியின் செல்வன் நாவல் தொடர்பாக பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

rajini and kamal in ponniyin selvan audio launch auditorium erupts

ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் மேடையில் இருக்கும் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

rajini and kamal in ponniyin selvan audio launch auditorium erupts

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'தளபதி' திரைப்படம் குறித்து சில விஷயங்கள் பேச வேண்டும் என ரஜினிகாந்த் விரும்பினார். அப்போது, தனது அருகில் நின்ற கமலிடம், நீங்கள் சென்று உட்காருங்கள் என ரஜினி அறிவுறுத்தினார். ஆனால், கீழே செல்லாமல் பரவாயில்லை எனக்கூறி, ரஜினி தோள் மீது கையும் போட்டு மேடையிலேயே நின்றார் கமல்.

இதன் பின்னர், ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும்  ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்ட நிலையில், ஒட்டுமொத்த அரங்கமும் ஆர்ப்பரித்துக் கொண்டாடியது.

Also Read | "PS-ல இந்த கேரக்டர் நான் பண்ணவானு கேட்டேன்.. மணி சார் ஒத்துக்கவே இல்ல.!"- ரஜினி..

தொடர்புடைய இணைப்புகள்

rajini and kamal in ponniyin selvan audio launch auditorium erupts

People looking for online information on Kamal Haasan, Ponniyin Selvan Audio Launch, Ponniyin Selvan part 1, Ponniyin Selvan Trailer Launch, Rajinikanth will find this news story useful.