டிரெய்லர் வந்ததுக்கு அப்புறம்...! ஆடை படம் குறித்து அமலாபால் கூறிய சுவாரஸ்ய தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மேயாதமான்' ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள படம் ஆடை. பர்ஸ்ட் லுக், டீசர் என அனைத்துமே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Amala Paul speaks about filming controversial scene Of Aadai

சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆடை படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிடப்பட்டது. அமலா பால், பார்த்திபன், அருண்பாண்டியன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய அமலா பால், ஆடை திரைப்படம் தனது சினிமா வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றார். இதுகுறித்து அவர் பேசியதாவது

இசை வெளியீட்டு விழா வரைக்கும் இந்த படம் வந்திருப்பது சந்தோஷமான விஷயம். எனக்கு வரும் கதைகள் முழுவதும் பொய்யாக இருந்தது. அதனால் சினிமாவைவிட்டு விலக முடிவு செய்திருந்தேன்.

அந்த நேரத்தில் தான் ஆடை கதை வந்தது. உடனே இயக்குனரை சந்தித்து கதை கேட்டேன். பிறகு இது ஏதும் இங்கிலிஷ் பட ரீமேக் இல்லையே எனக் கேட்டேன். இல்லை இது ஒரிஜினல் தான் என ரத்னகுமார் கூறினார்.

மேயாதமான் படத்திற்கு முன்பு ரத்னகுமார் எழுதிய கதை ஆடை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக அவர் மேயாதமான் எடுத்தார். இந்த படம் எனக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். இந்த படத்துக்காக எந்த ஒப்பந்தமும் போடவில்லை.

டிரெய்லர் வந்ததுக்கு அப்புறம் நிறைய பேர் ஏமாந்திருப்பாங்க. ஏனென்றால் படத்தில் ஆடையே இருக்காது என நினைத்திருப்பார்கள். டிரெய்லரை பார்த்த பிறகு இத்தனை காஷ்டியூமா என ஏமாந்து போயிருப்பார்கள் என அமலா கூறினார்