www.garudabazaar.com

வெற்றிமாறன் கதையில் பிரபல 'நடன' ஹீரோ! இயக்குநர், தயாரிப்பாளர் இவங்களா? வெளியான டைட்டில்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் தான் S.கதிரேசன். இதில் 'ஆடுகளம்' திரைப்படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றது.

Raghava Lawrence to act in vetrimaaran story producer kathiresan

இதேபோல், 'உதயம்', 'காக்காமுட்டை', 'விசாரணை', 'வட சென்னை' உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தது வெற்றிமாறனின், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம். இதில் 'காக்கா முட்டை' தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. 'விசாரணை' தேசிய விருது பெற்றதுடன் அகடமி விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் படமாகத் தேர்வானது.

இந்நிலையில் தான் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசனும், கிராஸ் ரூட் பிலிம் சார்பில் வெற்றிமாறனும் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு, அதாவது பொல்லாதவன் திரைப்படத்துக்கு பிறகு இணைந்து “அதிகாரம்” எனும் படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த படத்துக்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். பிரமாண்டமான பான்-இந்தியா படைப்பாக தயாராகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநரும், எதிர் நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாசு போன்ற வெற்றி படங்களை இயக்கியவருமான R.S.துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் நடைபெறும் என்று தெரிகிறது.

ALSO READ: 'ரஷ்மிகாவ பாத்தே ஆகணும்!'.. ஊரடங்கில் 900 கி.மீ பயணித்த ரசிகர்!..  கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrence to act in vetrimaaran story producer kathiresan

People looking for online information on Kathiresan, Raghava Lawrence, RS Durai Senthilkumar, Vetrimaaran will find this news story useful.