www.garudabazaar.com

ஸ்டார்ட் மியூசிக்! வெற்றிமாறனின் விடுதலை.. தனுஷின் 'D43' படங்களின் ஆடியோ உரிமம் .. மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

vetrimaaran viduthalai Karthick Naren D43 audio rights bagged

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட்டின் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவை கையாளுகிறார். ஈரோட்டின் சத்தியமங்கலம் காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு, 1986 ஆம் ஆண்டில் சிவாஜி, ரஜினிகாந்த் நடித்த படத்திற்கு பயன்படுத்தப்பட்ட தலைப்பு.

மேலும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை கதாநாயகன்  சூரியின் ‘வாத்தியார்’ என போஸ்டரில் குறிப்பிட்டிருந்தது.  முதன்முறையாக வெற்றிமாறனின் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.  இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. 

இதேபோல் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் தனுஷ் நடிப்பில் இயக்கும் படம்  D43. இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல லஹரி மியூசிக் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ALSO READ: ஆடை பட தயாரிப்பாளரின் புதிய படம்!! ஹீரோ காளி வெங்கட் ! ஹீரோயினாக கைகோர்க்கும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

vetrimaaran viduthalai Karthick Naren D43 audio rights bagged

People looking for online information on Dhanush, Viduthalai will find this news story useful.