www.garudabazaar.com

"இனிமே இப்படித்தான்!".. திடீரென பெயரை மாற்றிக் கொண்ட பிரபல இளம் நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி மற்றும் மாயநதி உள்ளிட்ட திரைப் படங்களில் நாயகனாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமாக அறியப்பட்டவர் தான் இளம் நடிகர் அபி சரவணன்.

Actor Abi Saravanan changhed his name to Vijay Vishwa

இவர் தான் தற்போது அபிசரவணன் என்று இருந்த தனது பெயரை 'விஜய் விஷ்வா' (Vijay Vishwa) என்று மாற்றிக் கொண்டுள்ளார். எனவே அனைத்து மீடியா நண்பர்களும் இவர் பற்றிய தகவல்களை சொல்லும்போது இனி  'விஜய் விஷ்வா' என்று குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேபோல் பெயர் மாற்றம் செய்தது முதல் தமது சமூக வலைதள பக்கங்களிலும் இவர் தமது முந்தைய பெயரான அபி சரவணன் என்பதை மாற்றி புதிய பெயரான 'விஜய் விஷ்வா' என்கிற பெயரில் அனைத்தையும் அப்டேட் செய்துள்ளார். 

பல்வேறு சூழல்களிலும் பொதுமக்களுக்கான நலத்திடங்களை தன்னார்வலராக சென்று களத்தில் இறங்கி செய்வது இவரது ஸ்டைல். இந்நிலையில் இளம் நடிகர் விஜய் விஷ்வா தற்போது சாயம், கும்பாரி மற்றும் பெயரிடப்படாத 9-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருவதாக தெரிகிறது.

ALSO READ: தளபதி வச்சிருக்க Gun-ல இவ்ளோ இருக்கா? Experts சொல்லும் ஆச்சரிய தகவல்கள்!

Actor Abi Saravanan changhed his name to Vijay Vishwa

People looking for online information on Abi Saravanan, Vijay Vishwa, VijayVishwa will find this news story useful.