Reliable Software
www.garudabazaar.com

Video: "புதுப்பேட்டை Time-ல நிதீஷ் அறிமுகம்.. இளைஞர்கள் பொறுப்பா இருக்கணும்!" - வெற்றிமாறன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைத்துறையில் தொடர்ந்து கொரோனாவால் நிகழும் மரண சம்பவங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தன. நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, ‘கில்லி’ மாறன் மற்றும் பாடகர்கள், சின்னத்திரை நடிகர்கள், இயக்குநர்கள் பலரும் இந்த பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தனர்.  

Director Vetrimaaran over on Nitish Veera demise Covid19

இந்த சோகத்தில் இருந்து திரைத்துறை மீளாத்துயரில் இருந்த நிலையில், வெண்ணிலா கபடிக்குழு, புதுப்பேட்டை, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனா பாதிப்பால் இன்று மரணம் அடைந்துள்ளார். இதற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அசுரன் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் நிதிஷ் மறைவு குறித்து பேசியுள்ளார். அதில், “நண்பர் நிதிஷ் மருத்துவமனையில் இருந்த தகவலை அறிந்து விசாரித்தபோது 2 நாட்களில் அவர் உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கலாம் என டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால் இன்று காலையில் அவர் இறந்த செய்தி வந்தது. அவரை எனக்கு புதுப்பேட்டை காலகட்டத்தில் இருந்தே தெரியும்.

Director Vetrimaaran over on Nitish Veera demise Covid19

நான் அப்போது உதவி இயக்குநர். ஒரு நடிகராக அவர் வாழ்வு மேடு பள்ளங்களுடன் இருந்தது. அசுரன் படத்துக்கு பின்னர் அவருக்கு நிறைய படவாய்ப்புகள் இருப்பதாக கூறி சந்தோஷப் பட்டார். இது அவருடைய குடும்பத்தினருக்கும், என்னை போல் அவரை அறிந்த நெருங்கிய நண்பர்களுக்கும் இழப்பு. பலரும் இந்த கொரோனாலாம் இல்லை. ஏமாற்று வேலை. சும்மா, இதன் நோக்கம் இதுதான் என பலவிதமாக சொல்லி கேட்டிருக்கேன். ஆனால் இந்த வருடம் நமக்கு தெரியவில்லை என்றாலும் கூட நமக்கு பிடித்தவர்களை, நெருக்கமானவர்களை கொரோனா தாக்குகிறது.

Director Vetrimaaran over on Nitish Veera demise Covid19

நாம் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய காலம் இது. முடிந்தவரை மாஸ்க் அணிவதை கடைபிடித்தால் கொரோனாவை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என சொல்கிறார்கள். ஜப்பானில், கொரோனா வைரஸை வைத்து டெஸ்ட் செய்யும்போது மாஸ்க் அணிந்தால் 70 % தொற்றை தடுக்க முடியும் என கண்டறிந்துள்ளார்கள். மாஸ்கை மூக்குக்கு கீழே இருக்குமாறு என்றெல்லாம் இல்லாமல், சரியாக போட வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

Director Vetrimaaran over on Nitish Veera demise Covid19

ஒருவேளை கொரோனா பாசிடிவாக இருந்தால், தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் மிகவும் நம்பும் மருத்துவர்களுடன் ஆலோசிக்கலாம். டாக்டர்கள் ஆக்ஸிஜன் அளவு 95%,94% என குறைவதை ஆக்ஸி மீட்டர் மூலம் அறிந்தால் கூட எச்சரிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். நாம் சரியான நேரத்துக்கு விரைவாக மருத்துவரை அணுகினால் மட்டுமே அவர்களின் சிகிச்சை நமக்கு உறுதுணையாக அமையும். மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள சொல்லி வலியுறுத்துகிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்று வருகிறது. நுரையீரல் பாதிப்பு பெரிதாக இல்லை என்கிறார்கள்.

Director Vetrimaaran over on Nitish Veera demise Covid19

எனக்கு வராது, நான் தினமும் ஆரோக்கியமான உடற்பயிற்சி செய்கிறேன், பாதிக்காது என்றெல்லாம் சொல்ல கூடாதென நினைக்கிறேன். வீட்டை விட்டு வெளியே வரும் இளைஞர்கள் உடல் வலிமையுடையவர்களாக இருக்கலாம். ஆனால் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் இருக்கிறார்கள். ஆக இளைஞர்களுக்கு பொறுப்பு இருப்பதாக பாருங்கள். மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். உங்கள் உயிர் உங்களை விட உங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தார்க்கும் முக்கியம்.! பொறுப்புடன் இருந்தால் மட்டுமே கொரோனாவை ஜெயிக்க முடியும். பாதுகாப்பாக இருங்கள்!” என குறிப்பிட்டுள்ளார்.

VIDEO: "புதுப்பேட்டை TIME-ல நிதீஷ் அறிமுகம்.. இளைஞர்கள் பொறுப்பா இருக்கணும்!" - வெற்றிமாறன்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Director Vetrimaaran over on Nitish Veera demise Covid19

People looking for online information on Asuran, NitishVeera, Vetrimaaran will find this news story useful.