www.garudabazaar.com

வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் திடீர் சந்திப்பு..! காரணம் இது தான்.. செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் திடீர் சந்திப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Vetri Maaran Raghava lawrance meeting photos goes Viral

Also Read | காத்துவாக்குல ரெண்டு காதல் படம் எப்படி இருக்கு? தியேட்டருக்கு FDFS ஷோ பார்க்க வந்த Anirudh! வைரல் VIDEO

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் தான் S.கதிரேசன். இதில் 'ஆடுகளம்' திரைப்படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றது.  இதேபோல், 'உதயம்', 'காக்காமுட்டை', 'விசாரணை', 'வட சென்னை' உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தது வெற்றிமாறனின், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம். இதில் 'காக்கா முட்டை' தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. 'விசாரணை' தேசிய விருது பெற்றதுடன் அகடமி விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் படமாகத் தேர்வானது.

வெற்றிமாறன் மற்றும் பைவ் ஸ்டார் கதிரேசன்  தயாரிப்பில் வெற்றிமாறனின் கதை,வசனம், திரைக்கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதுப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும், இரண்டாம் பார்வை போஸ்டரும் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தில் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த தமிழ்வேல் எனும் இளைஞராக ராகவாலாரன்ஸ் நடிக்கிறார். வேலைக்காக மலேசியா-சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்த தமிழக கூலித்தொழிலாளிகள் படும் இன்னல்களை இந்தப்படம் பேசும் என அவதானிக்கப்படுகிறது.

இந்த படத்தை எதிர் நீச்சல், கொடி, பட்டாஸ் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்க்கு இசை அமைப்பாளராக பிரபல தெலுங்கு பட இசை அமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  ஏற்கனவே லாரன்சின் காஞ்சனா - 3 படத்திற்க்கு தமன் தான் பின்னணி இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து ஆலோசிக்க வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் - கதிரேசன் - துரை செந்தில் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் திடீர் சந்திப்பு..! காரணம் இது தான்.. செம அப்டேட் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vetri Maaran Raghava lawrance meeting photos goes Viral

People looking for online information on ராகவா லாரன்ஸ், வெற்றிமாறன், Raghava Lawrance, Vetri Maaran will find this news story useful.