Beast Others
www.garudabazaar.com

கார்த்தி நடிக்கும் சர்தார் ஷூட்டிங் இந்த ஊர்லயா? ராஸி கண்ணா பகிர்ந்த சூப்பர் BTS Image!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தியின் 22வது படம் சர்தார் ஆகும்.

Raashi Kanna shared Sardar movie Mysuru shooting spot BTS Image

Also Read | செம்ம ஸ்டைலிஷ் லுக்ல நடிகை சமந்தா.. வேற மாரி வைரலாகும் போட்டோ ஷூட் வீடியோ!

கடைசியாக கார்த்தி நடிப்பில் சுல்தான் படம் திரை அரங்கில் வெளியானது. சர்தார் படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன், விருமன் படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொண்டார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Raashi Kanna shared Sardar movie Mysuru shooting spot BTS Image

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

Raashi Kanna shared Sardar movie Mysuru shooting spot BTS Image

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

Raashi Kanna shared Sardar movie Mysuru shooting spot BTS Image

சென்னையில் சர்தார் படப்பிடிப்பு ஜனவரியில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் மைசூரில் நடைபெற உள்ளது . இதற்காக படக்குழு மைசூரு சென்றுள்ளனர். நடிகை ராஸிகண்ணா மைசூரில் எடுத்த BTS புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

Raashi Kanna shared Sardar movie Mysuru shooting spot BTS Image

Also Read |  வெந்து தணிந்தது காடு.. தலைவன் சிம்புவுக்கு வழிய விடு.. புதிய போஸ்டருடன் GVM கொடுத்த சூப்பர் Update!

தொடர்புடைய இணைப்புகள்

Raashi Kanna shared Sardar movie Mysuru shooting spot BTS Image

People looking for online information on Karthi, Raashi kanna, Sardar movie, Sardar movie Mysuru shooting spot will find this news story useful.