RRR Others USA
www.garudabazaar.com

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங்.. பிரபல நடிகை பகிர்ந்த வைரல் BTS போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் BTS புகைப்படங்களை பிரபல நடிகை பகிர்ந்துள்ளார்.

Actress Raashi Kanna shared sardar movie BTS Images

தீயாய் பரவும் பீஸ்ட் படத்தின் புதிய தமிழ் போஸ்டர்.. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புது அப்டேட்!

நடிகர் கார்த்தியின் 22வது படம் சர்தார் ஆகும். கடைசியாக கார்த்தி நடிப்பில் சுல்தான் படம் திரை அரங்கில் வெளியானது. சர்தார் படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன், விருமன் படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொண்டார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Actress Raashi Kanna shared sardar movie BTS Images

சென்னையில் சர்தார் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

Actress Raashi Kanna shared sardar movie BTS Images

இந்த படத்தின் சென்னை படப்பிடிப்புக்கு நடிகை ராஸிகண்ணா விமானம் மூலம்  சென்னை வந்துள்ளார். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் ராஸிகண்ணா அறிவித்துள்ளார். ராஷி கண்ணா தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். இவர் ஜான் ஆப்ரகாம் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான ‘மெட்ராஸ் கஃபே’ மூலம் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினாலும், இப்போது அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார்.

Actress Raashi Kanna shared sardar movie BTS Images

இந்நிலையில் சர்தார் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இரவு படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்களை ராஷி கண்ணா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

Actress Raashi Kanna shared sardar movie BTS Images

தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்'.. செல்வராகவன் பகிர்ந்த சூப்பர் BTS போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Raashi Kanna shared sardar movie BTS Images

People looking for online information on Karthi, Raashi kanna, Sardar movie, Sardar movie BTS Images will find this news story useful.