RRR Others USA

"இந்த 3 படமுமே எனக்கு..".. நடிகர் கார்த்தி பகிர்ந்த ஃபோட்டோ.. சுவாரசிய பின்னணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடித்த பையா, கொம்பன் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களும் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றவை.

Paiya komban sulthan release on same day karthi shared a viral pic

விக்ராந்த் ரோனா: ”அவன் வர்றான்னு சொன்னாலே நடுங்குவாங்க” … சிம்பு வெளியிட்ட வைரல் டீசர்…

பருத்திவீரன் to பொன்னியின் செல்வன்…

நடிகர் கார்த்தி பருத்தி வீரன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்து இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். தமிழைத் தவிர தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உள்ளனர். தமிழ் நடிகர்கள் சங்கத் தேர்தலில் இரண்டு முறை பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டு இரண்டு முறையும் வெற்றி பெற்றவர். அவர் நடிப்பில் வெளியான பையா, நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன் மற்றும் கைதி ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தவை. இப்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Paiya komban sulthan release on same day karthi shared a viral pic

இந்நிலையில் கார்த்தி தற்போது தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர் நடிப்பில் வெளியாகி கவனத்தை பெற்ற பையா, கொம்பன் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களும் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியானவை. அதைப் பற்றி தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

பையா…

பருத்திவீரன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் என வித்தியாசமான வேடங்களில் நடித்த கார்த்திக்கு ஸ்டைலிஷ் இளைஞர் வேடத்தில் அவர் நடித்த பையா படம் முக்கியமான படமாக அமைந்தது. லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்திருந்தார். யுவனின் இசையில் அனைத்தும் பாடல்களும் ஹிட்டடிக்க, கார்த்தியின் வெற்றிப்படங்களில் அமைந்த பையா இதே 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதிதான் வெளியானது. கார்த்திக்கு தெலுங்கில் மார்க்கெட் உருவாக இந்த படமும் ஒரு காரணமாக அமைந்தது.

Paiya komban sulthan release on same day karthi shared a viral pic

கொம்பன்..

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான கொம்பன் திரைப்படம்  2015 ஆம் வருடம் ஏப்ரல் 2 ஆம் தேதிதான் வெளியாகியுள்ளது. கிராமிய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கார்த்தியின் படமாக கொம்பன் அமைந்தது. இந்த படத்தில் கார்த்தியோடு லட்சுமி மேனன், தம்பி ராமையா மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்திருந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது.

Paiya komban sulthan release on same day karthi shared a viral pic

சுல்தான்…

கார்த்தி நடிப்பில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியான சுல்தான் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் மூலமாக ராஷ்மிகா மந்தனா தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். மாஸ் ஆக்ஷன் படமாக உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியீருந்தார்.

Paiya komban sulthan release on same day karthi shared a viral pic

கார்த்தியின் சுவாரஸ்ய பதிவு….

இந்நிலையில் இந்த மூன்று படங்களைப் பற்றியும் தற்போது கார்த்தி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் ‘பையா திரைப்படம் எனக்கு முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தைக் கொடுத்தது. எனது முதல்படம் வெளியாகி 8 ஆண்டுகள் கழித்து வெளியான கொம்பன் என்னைத் திரும்பவும் கிராமத்து ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. சுல்தான் என்னை மறுபடியும் குழந்தை ரசிகர்களிடம் இட்டுச் சென்றது. இந்த மூன்று படங்களுமே ஒரே தேதியில்தான் ரிலீஸ் ஆகின. இந்த படங்களை நினைவுடையவைகளாக ஆக்கிய என்னுடைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி.’ என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

“Meaner… leaner… stronger”… வீர ராகவனின் ஒன் மேன் ஷோ – Beast படத்தின் goosebumps டிரைலர்!

தொடர்புடைய இணைப்புகள்

Paiya komban sulthan release on same day karthi shared a viral pic

People looking for online information on கார்த்தி, கொம்பன், சுல்தான், பருத்திவீரன், பையா, Karthi, Komban, Paiya, Sulthan will find this news story useful.