இயக்குனர் பாலா இயக்கத்திலான, சேது படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தவர் அபிதா.

Also Read | அமெரிக்காவில் சத்குருவுடன் GOLF ஆடிய நடிகை ரகுல் ப்ரித் சிங்.. செம வைரலாகும் சூப்பர் வீடியோ!
திருமதி செல்வம்:
இதேபோல் சீறி வரும் காளை, பூவே பெண் பூவே போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். சேது அபிதா என ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், பின்னர் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து சன் டிவி திருமதி செல்வம் தொடரின் மூலம் மக்களை சென்றடைந்தார்.
சீரியலில் வெற்றிநடை:
2007 ஆம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டு வரை கலைஞர் டிவியில் ஓடிய இந்த சீரியல் மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை எளிமையாக சொன்னதே இந்த சீரியலின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்த தொடரில் கதைநாயகனாக பிக்பாஸ் 5வது சீசன் பங்கேற்பாளரும் நடிகருமான சஞ்சீவ் நடித்திருந்தார். கடைசியாக சன் டிவியின் முத்தாரம் எனும் தொடரில் நடித்துவந்த அபிதா அதற்கு பின் இவர் பிரேக் எடுத்து கொண்ட நிலையில் இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
ரீ-என்ட்ரி:
ஆம், பல முன்னணி தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்பி வரும் முன்னணீ சேனலான பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒரு தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடருக்கு மாரி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாரி என்ற தொடரில் தான் நடிகை அபிதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதுதொடர்பான புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் இந்த தொடர் குறித்து அபிதாவே பேசுகிறார். இந்த தொடர் வரும் ஜூலை 4-ஆம் தேதி முதல் திங்கள்-வெள்ளி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Also Read | நடிகர் சோனு சூட்டிற்கு தனது தங்க பதக்கத்தை அர்ப்பணித்த கராத்தே சாம்பியன்.!