www.garudabazaar.com

சர்ச்சையான கதையா இருக்கு… எடுபடுமா? ரசிகரின் கமெண்ட்டுக்கு ‘நச்’ விளக்கம் கொடுத்த RJ பாலாஜி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் அடுத்து உருவாகி வரும் வீட்ல விஷேசம் படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி இன்று வெளியாகி கவனத்தைக் குவித்துள்ளது.

R J balaji crystal clear explanation to fan comment

முதல் படம் ஹிட் ஆயிடுச்சுன்னா பைத்தியம் புடுச்சிடும்…. செல்பி பட விழாவில் மிஷ்கின் பேச்சு!

பண்பலை தொகுப்பாளராக வேலை செய்துவந்த ஆர் ஜே பாலாஜி, தனது நகைச்சுவையான மற்றும் தனித்துவமான பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்தவர். சினிமா விமர்சனங்களை செய்துவந்த அதன் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தால் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். முதலில் நகைச்சுவை வேடங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்த அவருக்கு நானும் ரௌடிதான் படம் திருப்புமுனையாக அமைந்தது.

எல் கே ஜியும் மூக்குத்தி அம்மனும்

அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு பல படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் ஆகிய படங்களில் அவர் நகைச்சுவையாக மட்டும் இலலாமல் குணச்சித்திரமாக நடித்து தனது திறமையை நிருபித்தார். இதையடுத்து அவர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் எல் கே ஜி என்ற அரசியல் பகடி படத்தில் கதை, திரைக்கதையில் பங்களிப்பு செய்து நடித்தார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு என்பவர் இயக்கி இருந்தார்.

R J balaji crystal clear explanation to fan comment

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியால் மீண்டும் ஐசரி கணேஷோடு இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை சரவணன் என்பவரோடு இணைந்து இயக்கினார். மூக்குத்தி அம்மன் படத்தில்  அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்க, மத்திய தரவர்க்க குடும்பஸ்தனாக ஆர் ஜே பாலாஜி நடித்திருந்தார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த படமும் வெற்றிப்படமாக அமைந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான அம்மன் படமாக அமைந்ததால்  மூக்குத்தி அம்மனுக்கு குடும்ப திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைததது.

R J balaji crystal clear explanation to fan comment

பதாய் ஹோ ரீமேக்

இதையடுத்து ஆர் ஜே பாலாஜி இப்போது போனி கபூரின் பே வாட்ச் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வீட்ல விஷேசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் மலையாள நடிகை லலிதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தின் ரீமேக் ஆகும். இந்த பதாய் கோ திரைப்படம் இந்தியில் 220 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படமாகும், தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கியும் உள்ளார் பாலாஜி. இந்த படத்தின் போஸ்டர் மட்டும் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டு ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றது.

R J balaji crystal clear explanation to fan comment

ரசிகரின் கமெண்ட்டும் பாலாஜியின் விளக்கமும்

இந்நிலையில் இந்த போஸ்டர் பற்றி ரசிகர் ஒருவர் ‘சர்ச்சையான கதைக்களம். இந்த படம் தமிழகத்தில் எப்படி எதிர்கொள்ளப்படும் என உறுதியாக தெரியவில்லை’ எனக் கமெண்ட் செய்திருந்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக ஆர் ஜே பாலாஜி ‘ஆமா!!! பேமிலியில ஒருத்தர் கர்ப்பமா இருக்குற மாரி படம் எடுத்தா சர்ச்சையான கதை. ஆனா Hero , ரௌடி, டான், கொலகாரன், திருடன், கள்ளக் கடத்தல்காரனா நடிச்சா அது பேமிலி சப்ஜெக்ட் படம்’ எனத் தனக்கே உரிய பாணியில் பதில் கூறியுள்ளார். இந்த கமெண்ட்டும் ஆர் ஜே பாலாஜியின் பதிலும் இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.

அஜித் ஃபோட்டோ பகிர்ந்து விக்னேஷ் சிவனின் வைரல் இன்ஸ்டா பதிவு! குஷியில் AK ரசிகர்கள்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

R J balaji crystal clear explanation to fan comment

People looking for online information on Boney kapoor, Fan comments, LKG, Mookuthi Amman, R J Balaji, Veetla Visheshanga will find this news story useful.