www.garudabazaar.com

ஆக்சன் ஹீரோயினாக மாறிய ஆண்ட்ரியா.. அதிரடி சண்டைக்காட்சிகளுடன் பரபரப்பான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகி உள்ளது.

Andrea Jeremiah Starring Official Trailer of Kaa-The Forest

நடிகை ஆண்ட்ரியா ஒரு நடிகையாக, மாடல் மற்றும் பாடகியாக தனது சினிமா வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருக்கிறார். நடிகை ஆண்ட்ரியா, சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகைகளில் ஒருவர்.

ஆண்ட்ரியா கடைசியாக லோகேஷ் கனகராஜின் 'மாஸ்டர்' மற்றும் சுந்தர் சி யின் 'அரண்மனை 3' படத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் கா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. மே மாதம் 2020ல் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் ஆனது.

Andrea Jeremiah Starring Official Trailer of Kaa-The Forest

ஆண்ட்ரியா உடன் ரெட், வேட்டைக்காரன் படங்களில் நடித்த சலீம் கவுஸ், கமலேஷ் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி அறிமுக இயக்குனர் நாஞ்சில் இயக்கியுள்ளார். சுந்தர் சி பாபு இசையமைக்கிறார். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எலிசா படத்தொகுப்பை செய்துள்ளார். 

இந்த படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படத்தில் பாடல்கள் இல்லை என்றும், ஆண்ட்ரியா படம் முழுவதும் ஒரே ஒரு உடையில் மட்டுமே காணப்படுவார் என்றும் இயக்குனர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

Andrea Jeremiah Starring Official Trailer of Kaa-The Forest

அந்தமான், மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில் துவங்கிய இந்தப் படம் 4 ஆண்டுகள் படமாக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டில் ரிலீசாக ஜரூராக உள்ளது.

ஆக்சன் ஹீரோயினாக மாறிய ஆண்ட்ரியா.. அதிரடி சண்டைக்காட்சிகளுடன் பரபரப்பான டிரெய்லர்! வீடியோ

Andrea Jeremiah Starring Official Trailer of Kaa-The Forest

People looking for online information on Andrea Jeremiah, Kaa, Kaa The Forest will find this news story useful.