www.garudabazaar.com

முதல் படம் ஹிட் ஆயிடுச்சுன்னா பைத்தியம் புடுச்சிடும்…. செல்பி பட விழாவில் மிஷ்கின் பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மிஷ்கின் ஜி வி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள செல்ஃபி படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

Director mysskin interesting speech in selfie movie function

அஜித் ஃபோட்டோ பகிர்ந்து விக்னேஷ் சிவனின் வைரல் இன்ஸ்டா பதிவு! குஷியில் AK ரசிகர்கள்

ஜி வி பிரகாஷின் பேச்சிலர்

இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ்குமார், வர்ஷா பொல்லம்மா மற்றும் கௌதம் மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் செல்ஃபி. டி ஜி பிலிம் கம்பெனி மூலமாக சபரிஷ் என்பவர் தயாரித்துள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிடுகிறார். ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் வெற்றிமாறன், மிஷ்கின் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் கலந்துகொண்டனர்.

மிஷ்கின் தாணு கூட்டணி

Director mysskin interesting speech in selfie movie function

இந்த நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின் வழக்கம்போல ரசிகர்களைக் கவரும் விதமாகப் பேசினார். படக்குழுவினர் அனைவரையும் வாழ்த்திப் பேசிய அவர் பேச்சின் போது வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் தாணுவை புகழ்ந்து பேசினார். அதில் ‘நான் வெற்றிமாறனை எப்போதும் புகழ்ந்து பேசுவதால் அவருக்கு நான் படம் பண்ணப்போகிறேன் என நினைக்கவேண்டாம். அவருக்குப் பக்கத்தில்  இருக்கும் தாணு சாருக்குதான் அடுத்து படம் பண்ணப் போகிறேன். எனக்காக தாணுவிடம் வெற்றிமாறன், ராம் மற்றும் சீனு ராமசாமி ஆகியோர் சிபாரிசு செய்து பேசியுள்ளனர். ஏற்கனவே நான் தாணு சாரோடு படம் பண்ணுவதாக இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்தது. எனக்கு 50 ஆயிரம் ரூபாய் முன்பணமும் கொடுத்தார். அப்போது நான் அவருக்கு நந்தலாலா கதையை சொன்னேன். அவருக்கு அது பிடிக்கவில்லை.

முதல் படம் ஹிட்டானால்…

’அவர் என்னிடம் கதை நல்லா இருக்கு தம்பி. ஆனால் உன் முதல்படம் போல எதிர்பார்க்கிறேன்’ எனக் கூறினார். நானும் அவரும் பேசி பேசி கடைசியில் அதை அப்படியே விட்டு விட்டோம். முதல் படம் ஹிட்டானதும் இயக்குனருக்கு பைத்தியம் பிடித்துவிடும். அடுத்த படத்தில் உலகத்தையே மாற்றவேண்டும். சினிமாவை மாற்றவேண்டும் என்று. ஆனால் எதுவும் மாறாது’ எனக் கூறியுள்ளார். மேலும் விரைவில் தாணுவோடு இணைந்து படம் பண்ணப்போவதை உறுதி செய்துள்ளார்.

Director mysskin interesting speech in selfie movie function

மிஷ்கினின் பிசாசு 2

இயக்குனர் மிஷ்கின் இப்போது ஆண்ட்ரியா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம் ஏற்கனவே அவர் இயக்கத்தில் வெளியான பிசாசு  படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது.

அருண் விஜய் - ஹரி இணையும் 'யானை' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

மேலும் செய்திகள்

Director mysskin interesting speech in selfie movie function

People looking for online information on இயக்குனர் மிஷ்கின், செல்ஃபி, ஜி வி பிரகாஷ்குமார், Director Mysskin, G V Prakash, G V Prakash Kumar, Mysskin, Selfie movie, Selfie movie function will find this news story useful.