காணாமல் போனதாக வெளியான செய்தி குறித்து புஷ்பவனம் குப்புசாமியின் மகள் விளக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 17, 2019 07:45 PM
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி புகழ் பெற்றவர் புஷ்பவனம் குப்புசாமி. இவரது நாட்டுப்புற பாடல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவருக்கு இரண்டு மகள்கள்.

அதில், மூத்த பெண் பல்லவி டாக்டகராக பணிபுரிந்து வருகிறார். இவரை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி தனது பேஸ்புக் மூலம் வீடியோ வெளியிட்டார். அதில், 'தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தான் காணாமல் போன செய்தி அனைத்தும் வதந்திதான் என்றும் இது போன்ற செய்திகள் வெளியாவது தனக்கு கஷ்டமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காணாமல் போனதாக வெளியான செய்தி குறித்து புஷ்பவனம் குப்புசாமியின் மகள் விளக்கம் வீடியோ
Tags : Pushpavanam Kuppusamy, Pallavi