www.garudabazaar.com

முதல்நாளிலேயே 2 தடவை 'துணிவு' படம் பார்த்த 'சர்தார்' இயக்குனர்.. என்ன சொலலிருக்காருனு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தினை பிரபல இயக்குனர் பி.எஸ். மித்ரன் முதல் நாளில் இருமுறை பார்த்து ரசித்துள்ளார்.

Ps Mithran watching Thunivu Movie Two times on First day

Also Read | "ஒரு பொருளாதார அடியாள்".. 'துணிவு' படத்தை பாராட்டி இயக்குனர் வசந்தபாலன் வைரல் பதிவு!

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'. பொங்கலை முன்னிட்டு நேற்று (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Ps Mithran watching Thunivu Movie Two times on First day

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படமான 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 1 மணிக்கு இந்த திரைப்படம் வெளியானது. ‌

Ps Mithran watching Thunivu Movie Two times on First day

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Ps Mithran watching Thunivu Movie Two times on First day

துணிவு படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சர்தார், இரும்புத் திரை, ஹீரோ படங்களின் இயக்குனர் மித்ரன் தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு ட்வீட்களை பதிவிட்டுள்ளார். வில்லிவாக்கம் ஏஜிஎஸ் திரையரங்கில் துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த மித்ரன், இது தொடர்பான புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்.

Ps Mithran watching Thunivu Movie Two times on First day

மேலும் இரண்டாவது முறையாக துணிவு படத்தினை மித்ரன் கண்டு களித்துள்ளார். இது தொடர்பாக "தட்டி விட்டா தாறுமாறு அட்டிக்குள்ள யாரு பாரு. துணிவு கவுண்ட் நம்பர் -2" என மித்ரன் ட்வீட் செய்துள்ளார்.

Also Read | பிக் பாஸ் வீட்டிற்குள் Surprise என்ட்ரி கொடுத்த தனா.. அவங்க கையில் இருந்த டாட்டூவ கவனிச்சீங்களா!!

தொடர்புடைய இணைப்புகள்

Ps Mithran watching Thunivu Movie Two times on First day

People looking for online information on P S Mithran, PS Mithran, Thunivu Movie will find this news story useful.