தன் புது நிகழ்ச்சியின் மூலம் Trollsக்கு பதில் சொல்லும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 24, 2019 01:36 PM
தமிழ் சினிமாவில் தனது யதார்த்தமான நடிப்பால் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருபவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். இவர் 'ஆரோகணம்', 'அம்மணி', 'ஹவுஸ் ஓனர்' போன்ற தரமான படங்களை இயக்குநராகவும் பரவலாக அறியப்படுகிறார்.

.இந்நிலையில் 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' என்ற பெயரில் Behindwoods Air யூடியூப் சேனலில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கவுள்ளார். அதற்கான புரோமோ Behindwoods Air யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.
அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், நான் அதிக ஈடுபாடு காட்டிவந்த நிகழ்ச்சிக்கு நான் திரும்ப வந்துட்டேன். தங்கள் பிரச்சனைகளை பேச விரும்பும் ஆதரவு தேவைப்படும் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு களமாக இருக்கும். மேலும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு உங்கள் வாழ்த்துகள் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
தன் புது நிகழ்ச்சியின் மூலம் TROLLSக்கு பதில் சொல்லும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வீடியோ