நல்ல கதைக்கு எல்லாம் தானே அமையும்- இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘ஆரோகனம்’, ‘அம்மினி’ போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

House Owner Director Lakshmi Ramakrishnan declares, 'A good content oriented film earns it's actors'

சமீபத்தில் ஹவுஸ் ஓனர் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது, அதில் கலந்துக் கொண்டு திரைப்படத்தை பார்த்த பலரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

‘ஆடுகளம்’ கிஷோர், பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் ஆகியோர் இப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களது எதார்த்தமான நடிப்பு பாராட்டுக்களை குவித்து வருகின்றது.

இந்நிலையில், தனது திரைப்படத்திற்கு கிடைக்கும் பாராட்டுக்கள் குறித்து பேசிய இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தரமான நல்ல கதைகள் திறமையான நடிகர்களை தானே தேடிக்கொள்ளும் என்ற நம்பிக்கை இங்கு தான் பிறக்கிறது.

மேலும், இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். இப்படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன,  அந்த வரிசையில்  இந்தப்படமும் வெற்றிபெறும் என நம்புவதாக இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.