கொரோனாவினால் 'மாநாடு' ஷூட்டிங் நிறுத்தம் - சிம்புவை விமர்சித்த வீடியோ மீம்க்கு செம பதிலடி !
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி முதல் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக கொரோனா பாதிப்பு காரணமாக 'மாநாடு' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகர் சிம்புவை குறிப்பிட்டு வீடியோ மீம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதற்கு பதிலடி தரும் விதமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு எழுதியுள்ளார்.
அதில், ''கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரோனாவுக்கா இடம் கொடுப்போம்? இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் #STR தான். மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் "மாநாடு'' என்று குறிப்பிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு' படத்தில் சிம்பு, அப்துல் காலிக் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரணோவுக்கா இடம் கொடுப்போம்?
இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் #STR தான்.
மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் "மாநாடு" pic.twitter.com/RFKhqva4QO
— sureshkamatchi (@sureshkamatchi) March 16, 2020