Chill Bro..! தனுஷின் "பட்டாஸ்" படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Dec 05, 2019 10:18 AM
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுகிறது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, தர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இதனையடுத்து தனுஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லண்டனில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இதன் ஒரு பகுதியாக கொடி படத்துக்கு பிறகு இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் பட்டாஸ். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு விவேக் -மெர்வின் இணை இசையமைக்கின்றனர். தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் சினேகா, மெஹ்ரீன் பிர்ஸாடா ஆகியோர் நடித்துள்ளனர்.
‘பட்டாஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.
We have successfully completed the shooting for #Pattas 💥#PattasShootWrapped 😉
Thank you @dhanushkraja @durairsk @omdop @Naveenc212 @actress_Sneha @Mehreenpirzada @dhilipaction @PrakashMabbu @Gdurairaj10 & the entire team for your extreme hard work throughout this film. pic.twitter.com/4y746jdUCS
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 4, 2019