கவினும் லாஸ்லியாவும் Mic-off பண்ணிட்டு என்ன பேசியிருப்பாங்க? - பிரபல தயாரிப்பாளர் ஜாலி பதில்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 27, 2019 10:54 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை கமல்ஹாசன் லக்ஷரி பட்ஜெட் மதிப்பெண்கள் ஏன் குறைந்தது என்று கேட்டு ஒரு குறும்படம் போட்டுக்காட்டினார். அதில் இரவு கவினும் லாஸ்லியாவும் மைக்கை கழட்டி வைத்து பேசுகின்றனர்.

பின்னர் அதனை கமல் கடுமையாக கண்டித்தார். இது போட்டியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் போட்டியாளர்கள் பெரும்பாலானோர் அதனை காரணம் காட்டி கவினை நாமினேட் செய்தனர்.
இந்நிலையில் கவின் ஹீரோவாக நடித்த நட்புனா என்னனு தெரியுமா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் Bigg Boss குறித்து பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், மைக் விவகாரம் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், மைக்கில் உள்ள பேட்டரியை கழட்டிய பிறகு உங்கப்பா ஏன் இப்படி பன்றாருனு சேரனை பற்றி பேசியிருப்பார்கள்.
இல்லையென்றால் இருவருக்கும் இடையே தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசியிருப்பார்கள். அதனை தவிர்த்து வேறு யாரை பற்றி பேசப் போகிறார்கள். வேண்டுமானால் ஏதாவது கமென்ட் பண்ணி மாட்டிக்கக்கூடாது என்று பேசியிருப்பார்கள். என்றார்.
கவினும் லாஸ்லியாவும் MIC-OFF பண்ணிட்டு என்ன பேசியிருப்பாங்க? - பிரபல தயாரிப்பாளர் ஜாலி பதில் வீடியோ