www.garudabazaar.com

JollyOGymkhana: அடுத்த Beast சம்பவம் ... வெளியானது ஜாலியோ ஜிம்கானா புது ப்ரோமோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று மாலை வெளியாக உள்ள ஜாலியோ ஜிம்கானா பாடலின் புது ப்ரோமோ வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

Jolly o gymkhana song next promo nelson viral video

மம்முட்டி - ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய படம்! வெளியான வித்தியாசமான டீசர் வீடியோ!

பீஸ்ட் அறிவிப்பும் எதிர்பார்ப்பும்…

நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நடிக்கும் பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் இந்த திரைப்படத்தை காண்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு வெளியாகவுள்ள படங்களில் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் பீஸ்ட்டும் ஒன்றாக உள்ளது.

சாதனைப்படைத்த முதல் சிங்கிள்….

இந்த படத்தின் முதல் சிங்கிளான அரபிக்குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14 அம் தேதி வெளியாகி இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. அது மட்டுமில்லாமல் ரிலீஸ் ஆனது முதல் இப்போதுவரை இணையத்தில் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. தற்போது வரை இந்த பாடலைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 150 மில்லியனைக் கடந்துள்ளது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலர் இந்த பாடலுக்கு தங்கள் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jolly o gymkhana song next promo nelson viral video

ஜாலியோ ஜிம்கானா….

அரபிக்குத்துக்குப் பிறகு பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள செகண்ட் சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா பாடல்  இன்று மாலை வெளியாக உள்ளது. அதன் முன்னோட்டமாக சில தினங்களுக்கு முன்னர் 30 செகண்ட் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த பாடலில் விஜய் பாடிய சில வரிகள் இடம்பெற்று இருந்தன. வழக்கமாக விஜய் பாடும் பாடல்கள் துள்ளலிசை பாடல்களாகவே இருக்கும். அதை உறுதி செய்வது போலவே  வெளியான ப்ரோமோ வீடியோ இருந்தது. இதையடுத்து இன்று மாலை பாடல் வெளியாவதற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

Jolly o gymkhana song next promo nelson viral video

வெளியான புது ப்ரோமோ…

இந்நிலையில் தற்போது இந்த பாடல் உருவாக்கத்தின் போது நடந்த கலகலப்பான சம்பவங்களைக் கொண்ட ஒரு புதிய வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் ஜானி மாஸ்டர் ரெட்டின்ஸ், விடிவி கணேஷ் ஆகியோர்களுக்கு கடினமான நடன மூவ்மெண்ட்களை செய்துகாட்ட, அதைப் பார்த்து அதிர்ச்சியாகும் நெல்சன் இதெல்லாம் விஜய் சார் ஆட வேண்டிய மூவ்மெண்ட் ‘நீங்க அவர வச்சு செய்ங்க’… நான் இவங்கள வச்சு செய்கிறேன்’ என நகைச்சுவையாக பேசும் வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இசைஞானியின் ராக் வித் ராஜா… மகன்களோடு கலந்து கொண்ட தனுஷ் – வைரல் போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Jolly o gymkhana song next promo nelson viral video

People looking for online information on Beast, Jolly o gymkhana Song, Nelson, Nelson Dilipkumar, Vijay will find this news story useful.