www.garudabazaar.com

"அப்பவே ரட்சகன் படத்தோட பட்ஜெட் இவ்ளோவா?".. உண்மையை உடைத்த இயக்குநர் பிரவீன் காந்தி.. Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மையில் இயக்குநர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் பட்ஜெட்டை, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மிகைப்படுத்தி கூற வேண்டி இருந்ததாகவும், அது தவறு என்று தற்போது உணர்வதாகவும் தெரிவித்திருந்தார்.

Praveen Gandhi reveals ratchagan budget பிரவீன் காந்தி interview

இந்நிலையில் இதுகுறித்த ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி Behindwoods-ல் தொடரப்பட்டது.

அதில் பேசிய பிரபல இயக்குநர் பிரவீன் காந்தி, “தமிழ் சினிமாவின் நீண்ட கால பிரச்சனையை Behindwoods முன்னெடுத்ததற்கு வாழ்த்துகள். இந்திய சினிமாவில் பட்ஜெட்டை ஃபோகஸ் பண்ணி படம் எடுத்த இயக்குநர் நான் தான். ரட்சகன் படத்தின் பட்ஜெட் 15 கோடி ரூபாய் என்பது அப்போது ஹைலைட்டாக இருந்தது. 15 கோடியா என ஆச்சர்யப்பட்டார்கள்.

பாகுபலி படம் 150 கோடி ரூபாய் என சொல்லி பின்னர் 500 கோடி ரூபாய் வரை சென்றாலும், 1000 கோடி ரூபாய் என்று சொன்னாலும் அதன் பிரம்மாண்டம் ஸ்கிரீனில் தெரிகிறது. அவரது உழைப்பு அப்படி. ராஜமவுளிதான் எனது ரோல் மாடல்.

எனவே பட்ஜெட்டை மிகப்படுத்தி சொன்னால் தான் ஆடியன்ஸ் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து தியேட்டருக்கு வருவார்கள். அதாவது 500 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் 100 ரூபாயில் பார்த்த திருப்தி பார்வையாளர்களுக்கு கிடைக்கும்.

துணிக்கடையில் அதிக விலையுள்ள துணியை குறைந்த விலைக்கு எடுத்தால் கிடைக்கும் திருப்தியை போல. ஆயிரத்தில் ஒருவனை பொறுத்தவரை நிச்சயம் கூடுதலாக செலவாகியிருக்கும் என்பது என் கருத்து” என கூறியுள்ளார்.

Also Read: "பாகுபலி ரூ.150 கோடில ஆரம்பிச்சுது... Real பட்ஜெட்டை சொன்னா".. தனஞ்செயன் அதிரடி பேட்டி! Video

தொடர்புடைய இணைப்புகள்

Praveen Gandhi reveals ratchagan budget பிரவீன் காந்தி interview

People looking for online information on Nagarjuna, Praveen Gandhi, Ratchagan, Tamilcinema, Tamilcinemabudget will find this news story useful.