www.garudabazaar.com

அப்படி போடு!! ஒரே நாளில் டபுள் ட்ரீட் தந்த பிரபுதேவா... டைரக்டர் இவரா?... ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக தன் திரைவாழ்க்கையை தொடங்கினார் பிரபுதேவா. பிரபல நடன இயக்குனரான சுந்தரம் அவர்களின் பையனான பிரபுதேவா தன் அப்பா பணியாற்றும் படங்களில் நடன கலைஞராக ஆடிவந்தார். பின்பு அவரின் நடனம் ஈர்க்கப்பட்டு பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார்.

prabhudeva poikkal Kuthirai movie glimpse release today

prabhudeva poikkal Kuthirai movie glimpse release today

அதனைதொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கிய காதலன் படத்தின் மூலம் ஹீரோவானார். 90 களில் கொடிக்கட்டி பறந்த இளம் நாயகனாக வலம்வர தொடங்கினார் பிரபுதேவா.

இயக்குநர்

prabhudeva poikkal Kuthirai movie glimpse release today

நடிப்பில் இருந்து அடுத்த அவதாரமாக விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற போக்கிரி படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். தமிழில் மட்டுமில்லாது ஹிந்தியிலும் தன்னை இயக்குனராக நிலைநாட்டினார். சிறுது காலம் தமிழில் நடிக்காமல் ப்ரேக் எடுத்திருந்த பிரபுதேவா இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான தேவி படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

தற்போது முழு நடிகராக மாறிவிட்ட நிலையில், பகீரா, FLASHBACK மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை ஆகிய படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

சந்தோஷ் பி ஜெயகுமார்

prabhudeva poikkal Kuthirai movie glimpse release today

'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' 'இரண்டாம் குத்து' ஆகிய அடல்ட் காமெடி  படங்களை எடுத்து பிரபலமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். தமிழ் சினிமாவில் பேய் கலந்த அடல்ட் காமெடி படங்களின் பஞ்சத்தை தீர்த்து வைத்த பெருமை இவருக்கும் உண்டு. ஹாலிவுட்டில் அடல்ட் காமெடி படங்கள் நிறைய வரும், அதுவும் ஹிட் அடிக்கும். கோடம்பாக்கத்தில் பல இயக்குனர்கள் இந்த ஜானரை தொட்டதில்லை. ஆனால் முழு அடல்ட் காமெடி படங்கள் தந்து வெற்றியும் கண்டுள்ளார் சந்தோஷ். தற்போது அவர் இயக்கியுள்ள பொய்க்கால் குதிரை முழுக்க முழுக்க த்ரில்லர் ஜானரில் எடுத்துள்ளார்.

கிளிம்ப்ஸ்

prabhudeva poikkal Kuthirai movie glimpse release today

பொங்கல் திருநாளான இன்று பொய்க்கால் குதிரை படத்தின் GLIMPSE வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றுள்ள நிலையில் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பிரபுதேவா இந்தப் படத்தில் செயற்கைக் கால் பொருத்தியுள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஆக்ஷன் என்டெர்டெய்னர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் மகளை காக்க போராடும் தந்தையின் பாசத்தையும் திரில்லர் ஜானரில் உருவாக்கியுள்ளார் இயக்குநர்.

OTT ரிலீஸ்

திரையரங்கிற்கு வரும் என எதிர்பார்த்திருந்தால், கொரோனா வேறொன்றை முடிவு செய்கிறது. ஆகையால் இப்படத்தை  OTT-யில் வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது. முன்னதாக பிரபுதேவா நடிப்பில் வெளியான பொன் மாணிக்கவேல் திரைப்படம் OTT-யில் வெளியானது. நேற்று மாலை தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது.

prabhudeva poikkal Kuthirai movie glimpse release today

கொரோனா காலத்தில் மலையாள படங்கள் அதிகமா ஓடிடியில் ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்றன அதேபோன்று தமிழ் சினிமாவும் மாறி வருவது திரையரங்கு உரிமையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

prabhudeva poikkal Kuthirai movie glimpse release today

People looking for online information on OTT, Poikkal kuthirai, Poikkal kuthirai Ott, Prabudeva, Raiza Wilson, Santhosh P Jayakumar, Varalaxmi Sarathkumar will find this news story useful.