Radhe Others USA
ET Others
www.garudabazaar.com

வால்டர் பட இயக்குனரோடு பிரபுதேவாவின் ரேக்ளா.. அடுத்த கட்ட ஷூட் - செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பிரபுதேவா அடுத்து நடிக்க உள்ள படமான ரேக்ளாவின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Prabhu deva rekla movie shoot and pooja from today

Director மோகன் ராஜா படத்துல சிரஞ்சீவியுடன் இணையும் பிரபல பாலிவுட் ஸ்டார்.. வெளிவந்த அப்டேட்..!

நடனமும் நடிப்பும்

90 களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் பாடல்களுக்கான நடனத்தில் மிகப்பெரிய பாய்ச்சலை உருவாக்கியவர் பிரபுதேவா. அவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் ஷங்கர் இயக்கிய காதலன் திரைப்படத்தில் நடிகராக நடித்து அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவே தொடர்ந்து நடிப்பு, நடனம் எனப் பயணித்து வந்தார். அந்த காலத்தில் பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவான பாடல்கள் எவர்கிரீன் ஹிட்டாக இன்றுவரை அமைந்துள்ளன.

Prabhu deva rekla movie shoot from tomorrow

சல்மான் கானோடு கூட்டணி

இப்படி நடன இயக்குநராகவும் நடிகராகவும் மக்கள் மனதை கவர்ந்த பிரபு தேவா 2000களுக்கு பிறகு தனது பாதையை திரைப்பட இயக்கத்தை நோக்கி மாற்றிக் கொண்டார்.  விஜய்யின் 'போக்கிரி' படத்தின் மூலம் இயக்குனரானார். அந்த படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து படங்களை இயக்கினார். அதில் ஒன்றாக தமிழில் வெற்றி பெற்ற 'போக்கிரி' படத்தை ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் வாண்டட் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சல்மான் கான் பிரபு தேவா கூட்டணி ரசிகர்களுக்கு பிடித்த கூட்டணியாக அமைந்ததை அடுத்து அவர்கள் வரிசையாக  தபாங் படத்தின் பாகங்களை எடுத்தனர். தமிழை விட பாலிவுட்டில் அவருக்கு இயக்குனராக பல படங்கள் கிடைத்தன. கடைசியாக அவர்கள் கூட்டணியில் ராதே என்ற படம் சமீபத்தில் வெளியானது.

Prabhu deva rekla movie shoot from tomorrow

மீண்டும் நடிப்பு

ஒரு கட்டத்தில் நடிப்புக்கு இடைவேளை விழுந்துவிட்டதை உணர்ந்த நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தேவி , தேவி 2, 'பொன் மாணிக்கவேல்', சார்லி சாப்ளின் மற்றும் தேள் போன்ற படங்கள் மூலமாக மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டார். அடுத்து பிரபு தேவா நடித்து 'யங் மங் சங்', 'ஊமை விழிகள்', 'பஹீரா' உள்ளிட்ட படங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன.

Prabhu deva rekla movie shoot from tomorrow

ரேக்ளா

இப்போது கைவசம் பல படங்களை வைத்துள்ள பிரபுதேவா அடுத்து ரேக்ளா என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தை சிபிராஜின் வால்டர் படத்தை இயக்கிய அன்பு இயக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை மற்றும்  படப்பிடிப்பு இன்று நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பூஜையில் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின், ரேக்ளா பட இயக்குனர் அன்புவுக்கு தன்னுடைய கைக் கடிகாரத்தை அன்பளிப்பாக கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஓ இதான் Magical Realism –ஆ?… கவனத்தை ஈர்த்த குதிரைவால் டிரைலர்!

தொடர்புடைய இணைப்புகள்

Prabhu deva rekla movie shoot and pooja from today

People looking for online information on பிரபுதேவா, ரேக்ளா, Prabhu Deva, Rekla Movie will find this news story useful.