www.garudabazaar.com

first time இப்படி ஒரு கேரக்டரில் பிரபுதேவா!!.. ஓடிடி ரிலீஸ் தேதியுடன் வெளியான மாஸ் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜியாக இருந்தவர் பொன் மாணிக்கவேல்.

Prabhu Deva next direct OTT release official announcement

ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட இவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன் மாணிக்கவேல் என்று  கூறப்படுகிறது. எனினும் கற்பனை கலந்து புனைவாக உருவாகியுள்ள இந்த படத்தில் பொன் மாணிக்கவேலாக நடிகர் பிரபுதேவா நடிக்கிறார்.

டான்ஸ் மாஸ்டராகவும், இயக்குநராகவும், நடிகராகவும் திகழும் பிரபுதேவா, தற்போது தமிழில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிக்கும் பொன் மாணிக்கவேல் திரைப்படத்தை நேமிசந்த் ஜபக் தயாரிக்க, ஏ.சி.முகில் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார், இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பொன் மாணிக்கவேல் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி நீண்ட மாதங்கள் ஆகியும், இப்படத்தின் வெளியீட்டுத் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல் திரைப்படம், நவம்பர் 19-ஆம் தேதி டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ளது. இதற்கிடையில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் தேள், யங் மங் சங், ஊமை விழிகள், பஹீரா உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன.

இந்தப் படங்களின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்ததுடன், இப்படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Prabhu Deva next direct OTT release official announcement

People looking for online information on DisneyHotstar, Nivetha Pethuraj, Pon Manickavel, Prabhu Deva will find this news story useful.