Radhe Others USA
ET Others
www.garudabazaar.com

ஓ இதான் Magical Realism –ஆ?… கவனத்தை ஈர்த்த குதிரைவால் டிரைலர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ல குதிரைவால் படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Magical realism Kuthiraival movie trailer engaging fans

வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் ட்ரோன் பறக்கவிட்ட அஜித்…. வைரலாகும் வீடியோ!

பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ்

இயக்குனராக அறியப்பட்ட பா ரஞ்சித் தொடங்கியுள்ள "நீலம் புரொடக்‌ஷன்" தரமான படங்களை தயாரித்து வருகிறது. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களின் மூலம்  அவர்களுன் தயாரிப்பு என்றாலே, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அந்த வரிசையில் இப்போது "யாழி பிலிம்ஸ்" தயாரிப்பில் கலையரசன், அஞ்சலி பாட்டீல் நடிப்பில் மனோஜ் லியோனல் ஜான்சன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகிய இருவரும் இணைந்து இயக்கியுள்ள "குதிரைவால்" படத்தை நீலம் புரொடக்‌ஷ்ன்ஸ் வெளியிடுகிறது. இந்த அறிவிப்பு வந்த்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழத் தொடங்கிட்டது. இந்நிலையில் "குதிரைவால்" படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. ஏற்கனவே வெளியான போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவையே இந்த படம் ஒரு வித்தியாசமான படம் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளன.

Magical realism Kuthiraival movie trailer engaging fans

டிரைலர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு

மார்ச் 18 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதை முன்னிட்டு நேற்று வெளியான டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது அரசியல் படமா? அறிவியல் புனைவா? மேஜிக்கல் ரியாலிசம் என்றால் என்ன? என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இந்த படத்தைப் பற்றி பேசியுள்ள இயக்குனர்கள் "படம் நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும். இது ஒரு வித்தியாசமான முயற்சி. இதற்கு உறுதுணையாக இருக்கும் பா.ரஞ்சித் சாருக்கு நன்றிகள்" என்று கூறியுள்ளனர்.

மேஜிக்கல் ரியலிசம்

மேஜிக்கல் ரியலிசம் என்ற வகை சினிமாவுக்கு முன்பாகவே ஓவியம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இந்த வகைமை உலகளவில் புகழ் பெறுவதற்குக் காரணமாக அமைந்தவர் கொலம்பிய எழுத்தாளர் கார்ல் கார்சியே மார்க்வேஸ்தான். அவர் எழுதிய தனிமையின் நூறு ஆண்டுகள் (one hundred years of solitude) இந்த வகைமையில் எழுதப்பட்டு உலகம் முழுவதும் அதிர்வுகளை உருவாக்கிய நாவல். அதன் பின்னர் சினிமாவிலும் இந்த வகைமையில் படங்கள் உருவாகி வருகின்றன.

Magical realism Kuthiraival movie trailer engaging fans

மேஜிக்கல் ரியலிசம் என்பது எதார்த்தத்துக்கும் மாயாஜாலத்துக்கும் இடையில் இருக்கும் மங்கலான ஒரு புள்ளி அல்லது கோடு என சொல்லலாம். உலகத்தைப் பற்றிய எதார்த்தப் பார்வையில் சில மாயாஜாலங்களை சேர்த்து பார்ப்பதுதான் மாய எதார்த்தவாதம் என சொல்லப்படுகிறது. அந்த ஜானரில் உருவாகியுள்ள குதிரைவால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவாங்கியோடு ஓகே கண்மணி ரொமான்ஸ்… குக் வித் கோமாளியில் கலக்கிய நடிகர்!

Magical realism Kuthiraival movie trailer engaging fans

People looking for online information on Anjali Patil, கலையரசன், குதிரைவால் டிரைலர், பா ரஞ்சித், Kalaiyarasan, Kuthiraival movie, Kuthiraival movie trailer, Magical realism will find this news story useful.