4வது முறையாக குட்டி தேவதைக்கு அப்பாவான பிரபல ஹீரோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 09, 2019 10:10 PM
தெலுங்கில் முன்னணி நடிகரான மோகன்பாபுவின் மகனும், நடிகருமான விஷ்ணு மஞ்சு தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘குறள் 388’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2009ம் ஆண்டு விரானிக்கா ரெட்டி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2011ம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில், மீண்டும் விரானிக்கா கர்ப்பமாக இருப்பதாகவும், 4வது குழந்தையை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் விஷ்ணு மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
ஏற்கனவே, அரி, விவி, அவ்ரம் ஆகியோரை தொடர்ந்து 4வது குட்டி தேவதையாக மகள் பிறந்திருப்பதை நடிகர் விஷ்ணு மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விஷ்ணு மஞ்சு, வினி தம்பதியினருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
It’s a GIRL!!!! It’s a GIRL!!!!!! ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💋💋💋💋💋💋💋💋
— Vishnu Manchu (@iVishnuManchu) August 9, 2019