Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

'ஆதிபுருஷ்' பிரம்மாண்ட படத்துக்கு முடிவான ஹீரோயின்! பிரபாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி திரைப்படத்தைத் தொடர்ந்து பிரபாஸ்க்கு பிரம்மாண்ட படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

Prabhas adipurush heroine locks Kriti Sanon ஆதிபுருஷ்

தற்போது பூஜா ஹெக்டேவுடன் ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடிக்கும் பிரபாஸ், ராமர் கதாபாத்திரத்தில் ஆதிபுருஷ் என்கிற பிரம்மாண்ட புராண படத்தில் நடிக்கிறார்.  ஓம் ராவத் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

பிரபாஸ் நடித்து அண்மையில் வெளியான "சாகோ" படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் T-Series மற்றும் Retrophiles உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் ராம் கதாபாத்திரத்தில் பிரபாஸூம் ராவணன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சையஃப் அலி கானும் நடிக்கின்றனர்.

இதனிடையே சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்பட்டது.  ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. இந்நிலையில் கிருதி சானோன் (Kriti Sanon) இப்படத்தில் பிரபாஸூடன் ஜோடி சேர்கிறார். இதனை பிரபாஸ் தமது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

ALSO READ: பிரபல இயக்குநருக்கு மூளைச்சாவு..  ICU-வில் அனுமதி.. நேரில் சென்ற விஜய் சேதுபதி.. என்ன நடந்தது?

மேலும் செய்திகள்

Prabhas adipurush heroine locks Kriti Sanon ஆதிபுருஷ்

People looking for online information on Adipurush, Kriti Sanon, Prabhas will find this news story useful.