www.garudabazaar.com

திடீர் மாரடைப்பு... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவர் ஸ்டார்... முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லத்திகா எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாக்டர் பவர்ஸ்டார் சீனிவாசன்.

power star admitted in hospital due to heart attack?

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ந்டித்ததன் மூலம் நல்ல பிரபலமடைந்தார். பின் ஒன்பதுல குரு, சும்மா நச்சுனு இருக்கு, ஆர்யா சூர்யா, யா யா, தலைவன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஷங்கரின் ‘ஐ', வாலிப ராஜா என பல படங்களில் நடித்தார். 

power star admitted in hospital due to heart attack?

அதன் பிறகு ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தார். தற்போது பவர் ஸ்டார் பிக்கப் டிராப் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் பவர்ஸ்டாருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார்.

power star admitted in hospital due to heart attack?

இந்நிலையில் திடிரென பவர்ஸ்டாருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பவர்ஸ்டாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

power star admitted in hospital due to heart attack?

People looking for online information on Power Star, Seeni Vaasan, Srinivaasan will find this news story useful.