தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக ஒரு கட்டத்தில் வலம் வந்தவர் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் சீனிவாசன். இவரது வெகுளியான நடிப்பு ரசிகர்களிடம் இலகுவாக சிரிப்பை வரவைப்பதாக அமைந்தது.

சந்தானத்துடன் இவர் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அரசியல் வருகை குறித்து Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், திடீரென அரசியலுக்கு வரவில்லை. இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக ஒன்றரை வருடங்களாக இருக்கிறேன். தலைமை கேட்டுக் கொண்டதற்கு இணங்க தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறேன்.
பெண்கள் நாட்டின் கண்கள். பெண்கள் இல்லாம அரசியல் இல்லை. அவங்களுக்கு இப்போ பல பிரச்சனைகள் இருக்கு. கணவனால் தொல்லை. வேலைக்கு செல்லும் இடத்தில் தொல்லை. இப்படி பல காரணிகள். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசலாம் என்று இருக்கிறோம்.
பவர் ஸ்டார்னு சொன்னாலே ஓட்டு விழும். மக்கள் புதுமையை எதிர்பார்க்குறாங்க. என்னை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என நம்பி இந்த தேர்தலில் களமிறங்குகிறேன். என்றார்.
என் பெயர் சொன்னாலே ஓட்டு விழும் - பிரபல நடிகர் அதிரடி வீடியோ