www.garudabazaar.com

"Action King-க்குள்ள இவ்ளோ Sentiment-ஆ?".. கலங்கடித்த அர்ஜூனின் கதை.. Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் கிட்டத்தட்ட 90களின் தொடக்கத்திலிருந்தே முக்கியமான நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன்.

action king Arjun emotional story zee tamil Survivor video

இன்றும் தனக்கான மார்க்கெட்டை இழக்காமல் திரைப்படங்களில் ஹீரோவாகவும் அல்லது வில்லனாகவும் நேரடியாக நடித்து மிரட்டும் அர்ஜுன், முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இன்றும் திகழ்கிறார்.

அர்ஜுனை பொருத்தவரை தன்னுடைய உடற்கட்டை உறுதியாக வைத்திருப்பதன் மூலம் பலருக்கும் பிடித்தமானவர். ஆக்‌ஷன் காட்சிகள் என்றாலே சளைக்காமல் களத்தில் இறங்கும் அர்ஜுனுக்கு, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என்கிற பெயரே நிலைத்து போனது. இன்றும் தனது திரைப்படங்களில் தன்னுடைய ஆக்‌ஷன் காட்சிகளுக்கு குறைவில்லாமல் நடித்து வருகிறார் அர்ஜுன்.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவர் போட்டியை அர்ஜுன் தான் வழிநடத்துகிறார். சர்வைவர் போட்டியில் காடர்கள் தீவு - வேடர்கள் தீவு என்று இரண்டு பழங்குடி அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதனையே நடிகைகள் சிருஷ்டி டாங்கே மற்றும் இந்திரஜா ஆகிய இரண்டு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியிலிருந்து முதற்கட்டமாக அடுத்தடுத்து எலிமினேஷன் ரவுண்டில் எலிமினேட் ஆகியிருக்கின்றனர்.

தொடர்ந்து முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் இந்த போட்டியில் பங்கேற்று சவால்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றில், அர்ஜுன் நிறைய உருக்கமான தன்னுடைய வாழ்க்கை சம்பவங்களை பகிர்ந்திருக்கிறார்.

அதன்படி தொடக்கத்தில் மிகவும் சிரமப்பட்டு வந்த தான், தொடர்ச்சியான தோல்வி படங்களை சந்தித்ததை அடுத்து, சொந்த படங்களை தயாரித்து, சொத்துக்களை எல்லாம் இழக்கும் நிலைக்கு சென்றதாகவும், பிறகு தன்னுடைய தாயார் தன்னை மீட்டதாகவும் சர்வைவர் நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே பேசியிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் “இப்படித்தான் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் உருவாக்கி இருக்கிறார்” என்று  கண்கலங்கி வருகின்றனர். எனினும் பலர் இந்த வெற்றியை அவர் அடைந்ததற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் வாழ்க்கை தங்களுக்கு மோட்டிவேஷனாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

Also Read: வாவ்.. ‘தல’ போலவே.. களத்துல குதிச்ச சமந்தா.. என்ன பண்ணிருக்காங்க பாருங்க! வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

action king Arjun emotional story zee tamil Survivor video

People looking for online information on Arjun, Arjun Sarja, Emotional, Survivor, Trending, ZeeTamil will find this news story useful.