Reliable Software
www.garudabazaar.com

மரணம்!! மற்றுமொரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் கொரோனாவால் உயிரிழப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்த் திரைத்துறையில் இந்த கொரோனா பெருந்தொற்று சூழலில் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மரணித்து வரும் சோக சம்பவங்கள் தொடருகின்றன.

director mohan gandhi raman passed away at 89 due to covid19

முன்னதாக இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், தாமிரா, கே.வி.ஆனந்த், பழம்பெரும் நடிகர்கள் கல்தூண் திலக், பாடகர்கள் எஸ்பிபி, கோமகன், டிகேஎஸ் நடராஜன், நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, குணச்சித்திர நடிகர் ‘கில்லி’ மாறன், கஜினி பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், தாதா87 படத்தின் இளம் தயாரிப்பாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து மரணித்தனர்.

இதேபோல் திரைத்துறை பிரபலங்களின் நெருங்கிய உறவினர்கள் பலரும் மரணித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது பழம்பெரும் இயக்குநர் மோகன் காந்தி ராமன் காலமாகியுள்ளார். பழம்பெரும் இயக்குநர் நீலகண்டனிடம் உதவியாளராக இருந்த இவர் சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்டோரின் படங்களில் பணியாற்றினார். பின்னர் செல்வியின் செல்வன், வாக்குறுதி, ஆனந்த பைரவி, காலத்தை வென்றவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.

இதேபோல் மலையாளத்தில் விமோஜன சமரம், சுவர்ண விக்ரகம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மோகன் காந்தி ராமன், தமிழில் கில்லாடி மாப்பிள்ளை என்கிற படத்தில் பாண்டிராஜனின் தந்தையாக நடித்துள்ளார்.  சில காலம் பெப்சி அமைப்பில் தலைமை வகித்த மோகன் காந்தி ராமன் தற்போது 89 வயதான நிலையில் கொரோனா பெருந்தொற்றால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ALSO READ: அடுத்த அதிர்ச்சி!! கலங்க வைத்த மரணம்! இயக்குநர் ராஜூ முருகன் குடும்பத்தில் நடந்த சோகம்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

director mohan gandhi raman passed away at 89 due to covid19

People looking for online information on Director, MohanGandhiRaman, RIP will find this news story useful.