www.garudabazaar.com

ஷெரின்-க்கு 'கொரோனா பாசிடிவ்'-னு வந்த ரிசல்ட் தப்பா?... அவரே பதிவிட்ட பரபரப்பு post!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ‘துள்ளுவதோ இளமை’, ‘விசில்’, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, கோவில்பட்டி வீரலட்சுமி, பீமா, நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஷெரின்.

sherin covid19 old result explanation ஷெரின் கொரோனா முடிவு

தவிர தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ள ஷெரின் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர் அண்மையில் தான் கொரோனா தொற்று பாசிடிவ் என ரிசல்ட் வந்ததிருப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் அப்போது வெளியிட்ட வீடியோவில், “எனக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் லேசான பாதிப்பு தான் உள்ளது. எனினும் இந்த நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வீட்டிலேயே இருங்கள்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தான் தனக்கு கொரோனா என்று பரிசோதனையின் முடிவு தவறான தகவல் வந்து இருக்கலாம் தமது மருத்துவர் கூறுவதாக தற்போது ஷெரின் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தமது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் நடிகை ஷெரின் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு இரண்டு முறை தொடர்ச்சியாக பரிசோதனை செய்ததில் நெகடிவ் என வந்துள்ளது. இதனால் இதற்கு முன்பாக 16-ஆம் தேதி செய்த பரிசோதனையில் கொரோனா பாசிடிவ் என்று வந்த முடிவு தவறாக இருக்கலாம் என்று எனது டாக்டர் தெரிவித்து உள்ளார்.

பின்னர் 17-ஆம் தேதி நான் மேற்கொண்ட பரிசோதனையிலும், தற்போது மேற்கொண்ட பரிசோதனையிலும் எனக்கு கொரோனா நெகடிவ் என வந்துள்ளது. இருப்பினும் பாதுகாப்புக்காக சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதை தொடர்கிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: அதிர்ச்சியில் ரசிகர்கள்!!.. "Show-ல இருந்து விலகுறத தவிர வேற வழியே இல்ல!".. நடிகையின் Viral பதிவு!!

தொடர்புடைய இணைப்புகள்

sherin covid19 old result explanation ஷெரின் கொரோனா முடிவு

People looking for online information on Actress Sherin, Biggboss, Biggbosstamil, Covid19India, CovidResults, Sherin, Sherin Covid19, Trending, VijayTelevision will find this news story useful.