"கொரோனா நேரத்துல.. இது நம்பிக்கை துரோகம்... இந்த பாவம் உங்களை சும்மா விடாது".. கொந்தளித்த நடிகை ..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலை செய்பவர்களும். வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். அநாவசியமாக யாரும் வெளியில் வருவது இல்லை. இப்படி பட்ட நிலைமையில் அரசாங்கம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் உட்பட பல சலுகைகளை அறிவித்து உள்ளது.
![கொரோனா நேரத்தில் சிலரின் செயலால் கொந்தளித்த விஜய் டிவி பிரபலம் Popular Vijay Tv Actress Fumes Over Cruel Activities Of Some people during Co கொரோனா நேரத்தில் சிலரின் செயலால் கொந்தளித்த விஜய் டிவி பிரபலம் Popular Vijay Tv Actress Fumes Over Cruel Activities Of Some people during Co](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-vijay-tv-actress-fumes-over-cruel-activities-of-some-people-during-photos-pictures-stills.jpg)
இப்படி மனிதர்களை காக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் வாயில்லா ஜீவன்களுக்காக தான் தற்போது நடிகையும், பாடகியான சவுந்தர்யா பேசியுள்ளார். ஆம் பலரும் இந்த கொரோனா பயம் காரணமாக தாங்கள் வளர்த்து வந்த செல்ல பிராணிகளை வெளியே துரத்தியுள்ளனர். இதனை வன்மையாக கண்டித்த அவர் " இது நம்பிக்கை துரோகம் இல்லையா. இத்தனை நாள் அன்பு காட்டி விட்டு இப்போது துரத்தி அடிக்கிறீர்கள். இந்த பாவம் உங்களை சும்மா விடாது. வாயில்லா ஜீவன்களை இப்படி வதைக்காதீர்கள்" என்று உணர்ச்சி பூர்வமாக கூறியுள்ளார்.