பிரபல டிவி தொகுப்பாளர் கார் விபத்தில் மரணம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 29, 2019 11:56 AM
பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும், நடிகரும், மிமிக்ரி ஆர்ட்டிஸ்டுமான மனோ சாலை விபத்தில் உயிரிழந்தார்.

சின்னத்திரை தொகுப்பாளரான நடிகர் மனோ, ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலம் டான்சராகவும் பிரபலமானார். மிமிக்ரி கலைஞரான மனோ தமிழகம் முழுவதும் பல மேடை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
இந்நிலையில், இவர் நேற்று அம்பத்தூர் அருகே தனது மனைவியுடன் நடிகர் மனோ காரில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நடிகர் மனோ சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.
நடிகர் மனோவின் மரணத்திற்கு சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.