பிரபல தொலைக்காட்சி தம்பதிக்கு அழகிய குழந்தை பிறந்தது... போட்டோவை வெளியிட்டு மகிழ்ச்சி..!
முகப்பு > சினிமா செய்திகள்இந்த கொரோனாவால் நாளுக்கு நாள் சோக செய்திகள் அதிகரித்துக் வரும் அதே வேளையில் சில நல்ல செய்திகளும் மக்களை சந்தோஷப்படுத்துகிறது. அப்படி ஒரு நல்ல செய்திதான் இது. தொலைக்காட்சி ரியல் ஜோடியான ஸ்மிர்தி கண்ணாவுக்கும், கெளதம் குப்தாவிற்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

சமீபத்தில் தன் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மிகவும் ரொமான்டிக்கான பதிவை பதிவிட்டிருந்த ஸ்மிர்தா கண்ணா தற்போது இந்த பதிவை பதிவிட்டுள்ளார். கடினமான இந்த நேரத்தில் இந்த செய்தி அவர்களது ரசிகர்களை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதன் முதலாக தாங்கள் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் "எங்கள் இளவரசி வந்துவிட்டாள்" என்று மகிழ்சசியாக தலைப்பிட்டுள்ளனர். இருவரும் பிரபல கலர்ஸ் தொலைக்காட்சி நடத்திய Meri Aashiqui Tumse Hi நிகழ்ச்சியில் பங்கேற்று காதல் வயப்பட்டனர். பின்பு இருவரும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.