'இன்று நேற்று நாளை 2' - சமுகம் டைம் டிராவலுக்கு ரெடியா ? - அதிகாரப்பூர்வ தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்விஷ்ணு விஷால், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. டைம் டிராவல் விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தை ரவிக்குமார் எழுதி இயக்கியிருந்தார்.

இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்துக்கு ரவிக்குமார் கதை எழுத, அவரது உதவியாளர் கார்த்திக் இந்த படத்தை இயக்குகிறாராம். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து இந்த படம் குறித்து அப்டேட் கேட்ட ரசிகரிடம், இந்த படத்தின் எழுத்துப் பணிகள் ஓரளவுக்கு முடிந்து விட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் இந்த படத்தின் முதற்கட்டப்பணிகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
🤗✌🙏 #IndruNetruNaalai2 #Karunakaran @Ravikumar_Dir @spkarthikid @GhibranOfficial @dineshkrishnanb
:) https://t.co/PbskgjmOYb pic.twitter.com/CjG1lgnjcP
— VISHNU VISHAL - stay home stay safe (@TheVishnuVishal) April 17, 2020