தம்பியின் முடியை பிடித்து, சண்டை போடும் பிரபல தமிழ் நடிகை... ஊரடங்கின் 5-வது நாளே இப்படியா...?
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். நேற்றைய தினம் பேசிய பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை அதுல்யா வீட்டில் தன் குடும்பத்தினர் உடன் தனிமையில் இருக்கிறார். ஊரடங்கு உத்தரவின் 5-ம் நாளான இன்று அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனது சகோதரர் உடன் முடியை பிடித்து சண்டை போடுகிறார். பார்க்கவே வேடிக்கையாக இருந்த இந்த வீடியோவின் மேல் "அய்யோ 5-வது நாளே நானும் எனது தம்பியும் சண்டை போட ஆரம்பித்து விட்டோம்" என்று கூறியுள்ளார்.
Tags : Athulya Ravi, Fight, Corona, Covid19, Corona Virus, Lockdown, Quarantine