பாடிக் கொண்டிருக்கும் போதே சுருண்டு விழுந்து.. உயிரிழந்த பிரபல பாடகர்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் எடவா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர் (வயது 78).

Popular singer edava basheer collapse in concert stage

ஆலப்புழா பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன், ப்ளூ டைமண்ட் இசைக் குழுவின் கச்சேரி ஒன்று நடந்துள்ளது.

இந்த இசைக் கச்சேரியில், பாடகர் எடவா பஷீர், ஹிந்தி பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென பாடிக் கொண்டிருக்கும் போதே, நிலைத் தடுமாறி மேடையில் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.

இசையுடன் பயணம்

இதனைக் கண்டதும் அங்கிருந்த அனைவரும் பதற்றமும், அதிர்ச்சியும் அடைய, உடனடியாக, பஷீரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே பஷீர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ப்ளூ டைமண்ட் இசைக் குழுவில், நீண்ட காலமாக அங்கம் வகித்து வரும் எடவா பஷீர், தன்னுடைய பள்ளிக் காலம் முதலே இசை மீது அதிக விருப்பம் கொண்டு, அதனுடன் பயணித்தும் வந்துள்ளார்.

பாடல்கள் அனைத்தும் பிரபலம்

அது மட்டுமில்லாமல், திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள எடவா பஷீர், நிறைய விருதுகளையும் வென்றுள்ளார். திரைப்படங்களில் ஏகப்பட்ட பாடல்களை எடவா பஷீர் பாடி இருந்தாலும், இசைக் கச்சேரிகள் மூலம் அதிகம் புகழ் பெற்றவர் அவர். கேரளா மட்டுமில்லாமல், வெளிநாடுகள் பலவற்றிற்கும் சென்று, இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார் பஷீர்.

திருவனந்தபுரம் பகுதியில், இசைக்குழு ஒன்றை நடத்தி வரும் எடவா பஷீர், கேரளாவைச் சுற்றியுள்ள கோவில் நிகழ்ச்சிகளில் பாடியுள்ள ஏராளமான பாடல்கள், மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனதாகும். எடவா பஷீர் மறைவுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன், இசை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Popular singer edava basheer collapse in concert stage

People looking for online information on Edava Basheer, Kerala, Music Concert, Singer will find this news story useful.