செம டேஸ்ட்! கேரள கறிமீன் சாப்பிட்டு சமையல்காரரை புகழ்ந்த கமல்.. கூட யாரெல்லாம் இருக்கா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல் கேரள கறி மீன் சாப்பிட்ட புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகின்றன.

Kamal Haasan Andrea Jeremiah DSP ate Kerala Style Fish Nirvaana

Also Read | BREAKING: 'சியான்' விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் #CHIYAAN61.. படத்துக்கு பேரு இதுவா? போடு வெடிய

கமல்ஹாசன் நடிப்பில் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.  விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

இந்நிலையில் கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சமையல் கலைஞரான சுரேஷ் பிள்ளை தனது சமூக வலைதளங்களில் கமலுடன் இருக்கும் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.  சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் நடந்த பார்ட்டியில் கேரள மீன் உணவுகளை பிரத்யேகமாக சுரேஷ் பிள்ளை சமைத்துள்ளார்.

Kamal Haasan Andrea Jeremiah DSP ate Kerala Style Fish Nirvaana

இந்த மீன் உணவுகளை உண்ட கமல்ஹாசன், கறிமீன் குறித்து பேசிய வீடியோவையும் சுரேஷ் பிள்ளை வெளியிட்டுள்ளார். அதில், "நிர்வானா கறி மீனின் சுவையை புகழ்ந்துள்ளார். மலையாள படங்களின் படப்பிடிப்பின் போது, தான் காலை, மதியம், இரவு மூன்று வேலையும் கறி மீன் உண்டதாகவும் கூறியுள்ளார்.

Kamal Haasan Andrea Jeremiah DSP ate Kerala Style Fish Nirvaana

இந்த பார்ட்டியில் நடிகை ஆன்ட்ரியா, தேவி ஸ்ரீ பிரசாத், காளிதாஸ் ஜெயராம், லிஸி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆன்ட்ரியா பேசும் போது, கேரளாவில் படப்பிடிப்பு நடப்பது பிடிக்கும் என்றும், கேரள உணவு சாப்பிடுவது மகிழ்ச்சி என்றும் கூறினார்.

விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர்.

Kamal Haasan Andrea Jeremiah DSP ate Kerala Style Fish Nirvaana

விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே 15 ஆம் தேதி, ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kamal Haasan Andrea Jeremiah DSP ate Kerala Style Fish Nirvaana

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

செம டேஸ்ட்! கேரள கறிமீன் சாப்பிட்டு சமையல்காரரை புகழ்ந்த கமல்.. கூட யாரெல்லாம் இருக்கா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Andrea Jeremiah DSP ate Kerala Style Fish Nirvaana

People looking for online information on Andrea Jeremiah, Kamal Haasan, Kerala Style Fish will find this news story useful.