பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த 'தோனி' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் முரளி சர்மா. தொடர்ந்து 'ஆரம்பம்', 'பட்டத்துயானை', 'பாயும்புலி' , 'அஞ்சான்', 'தேவி' என படத்துக்கு படம் வித்தியாசமான வேடங்களால் ரசிகர்களை அசரடித்து வருகிறார்.

நடிகர் முரளி சர்மா தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்திருந்த அல வைக்குந்தபுரமுலோ திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இவரது தாயார் பத்மா சர்மா நேற்று (09/06/2020 ) தனது வீட்டில் இருக்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் முரளி சர்மாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Tags : Murali Sharma
மேலும் செய்திகள்
Popular Actor Murali Sharma's Mother passes away due to heart attack | பிரபல நடிகர் முரளி சர்மாவின் தாயார் மரணம்
People looking for online information on Murali Sharma will find this news story useful.