www.garudabazaar.com
www.garudabazaar.com

பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்... வருங்கால கணவருடன் வெளியிட்ட புகைப்படம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து பலரும் தங்கள் திருமணம் மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்தனர். இந்நிலையில் ஊரடங்கு தற்போது தளர்வுபடுத்தப் பட்டுள்ள நிலையில் பல பிரபலங்களும் வரிசையாக தங்கள் திருமணம் பற்றிய செய்திகளை அறிவித்து வருகின்றனர்.

popular serial actress going to be married பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். இந்த சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டின் டாப் சீரியல்என்று பெயர் வாங்கியிருந்தது. இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வந்த ரேஷ்மா மற்றும் மதன் சமீபத்தில் தங்கள் காதலை பற்றி வெளிப்படுத்தினார்கள்.

இந்நிலையில் இதே சீரியலில் நடித்து வந்த வைஷ்ணவி ஜெய் என்பவருக்கு தற்போது நிச்சயதார்த்தம் நிகழ்ந்துள்ளது. இதில் மைனா நந்தினி, மற்றும் அவரது கணவர் உட்பட பலசின்னத்திரை பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

popular serial actress going to be married பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்

People looking for online information on Poove poochudava will find this news story useful.