அந்த சூப்பர்ஹிட் சீரியல் பிரபலம் செம ஹாப்பி.. ''குழந்தை பிறந்தாச்சு..'' குவியும் வாழ்த்துக்கள்.
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல சீரியல் நடிகர் தனது குழந்தை பிறந்திருக்கும் தகவலை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து வருபவர் கார்த்திக் வாசு. இவர் கனா காணும் காலங்கள், காதல் முதல் கல்யாணம் வரை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் தற்போது பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்திக் வாசு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சந்தோஷமான செய்தியை வெளியிட்டுள்ளார். தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை பகிர்ந்துள்ள அவர், ''தாயும் சேயும் நலம், சீக்கிரமே குழந்தையின் போட்டோவை பகிருவேன்'' என அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு இன்ஸ்டாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Tags : Poove Poochudava Serial, Karthik Vasu
மேலும் செய்திகள்
சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்தது | Poove poochudava serial actor blessed with baby boy
People looking for online information on Karthik Vasu, Poove Poochudava Serial will find this news story useful.