www.garudabazaar.com

பிரபல தாயரிப்பாளர் திடீரென மரணம் அடைந்தார்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இதனால் பல துக்க செய்திகளை நாம் கேட்டு வருகிறோம். கலைஞர்கள் அடுத்தடுத்து மரணித்து வருவதும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் அடைந்ததை தொடர்ந்து, புகழ்பெற்ற இசைக் கலைஞர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மரணமடைந்த செய்தி அனைவரையும் உலுக்கியது. அந்த காயம் ஆறுவதற்கு உள்ளாகவே மீண்டும் ஒரு தக்க செய்தி வெளியாகியுள்ளது.

Popular producer passes away ft krishnakanth பிரபல தாயரிப்பாளர் மரணம் அடைந்தார்

சூப்பர் ஹிட் படங்களான தனுஷ் நடித்த 'திருடா திருடி' மற்றும் விக்ரம் நடித்த 'கிங்' போன்ற படங்களை தயாரித்த எஸ்.கே கிருஷ்ணகாந்த் நேற்றைய தினம் மரணம் அடைந்துள்ளார். இரவு 10:45 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. மாரடைப்பு காரணமாக இந்த துக்க சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Popular producer passes away ft krishnakanth பிரபல தாயரிப்பாளர் மரணம் அடைந்தார்

People looking for online information on Krishnakanth, Producer will find this news story useful.