பிரபல பாலிவுட் நடிகை சடலமாக மீட்பு... நடந்தது என்ன?... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நிகழும் திரையுலக பிரபலங்களின் மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் 'தி டர்ட்டி பிக்சர்' போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்த பிரபல பெங்காலி நடிகை ஆர்யா பானர்ஜி வெள்ளிக்கிழமை (டிசம்பர் 11) அவரது தெற்கு கொல்கத்தா இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

தகவல்களின்படி, போலீசார் அவரது மூன்றாவது மாடி குடியிருப்பின் கதவை உடைத்து, படுக்கையறையில் பார்த்த போது 33 வயதான நடிகை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தரையில் சில ரத்தத் துளிகள் கிடந்தநிலையில் அவர் முகம் கீழே விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வரும்போது மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்யா மறைந்த சிதார் கலைஞர் நிகில் பந்தோபாத்யாயவின் மகள். இவர் லவ் செக்ஸ் அவுர் தோகா(2010), தி டர்ட்டி பிக்சர் (2011) மற்றும் சில படங்களில் நடித்ததுடன் மாடலிங் வேலைகளையும் செய்தார்.