பிரபல சென்னை கல்லூரி முன்பு எடுத்த போட்டோ... மலையாள ஆல்ரவுண்டர் நடிகர் 'நெகிழ்ச்சி'...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சினிமா பிரபலங்களும் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி மலையாள சினிமாவின் ஆல் ரவுண்டரான வினீத் ஸ்ரீனிவாசன் ஒரு பதிவு இட்டுள்ளார். சென்னையின் KCG கல்லூரி வளாகத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இணைத்துள்ளார்.
அதில் அவர் "எனது மனைவி திவ்யாவுடன் 16 வருடங்கள். இதே இடத்தில் தான் நான்கு வருடங்கள் ஒன்றாக இருந்தோம். இப்போது எல்லாம் மாறி விட்டது. அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டார். எனது Wonder Woman-க்கு திருமண தின நல்வாழ்த்துக்கள்" என்று அன்புடன் கூறியுள்ளார்.