கார்த்திக் நரேன் இயக்கிய 'துருவங்கள் பதினாறு' திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரகுமான் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.

இதனையடுத்து அவர் அரவிந்த் சுவாமியை வைத்து 'நரகாசூரன்' படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்ய, ரோன் எதன் யோகன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஸ்ரதா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது.